பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Update: 2022-09-30 18:45 GMT

பர்கூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 65), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 24-ந் தேதி பர்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு பர்கூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள கல்லத்துப்பட்டி பகுதியில் அவர் நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், மாணிக்கம் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்தார். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்