திருப்புவனம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலகன்னிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). மதுரையில் குடும்பத்துடன் தங்கி ஒரு கடையில் வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்கு திருவிழாவுக்கு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு சென்றார். திருப்புவனம் அருகே சென்றபோது சக்குடி விலக்கு பாலத்தின் முன்பு உள்ள இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இ்து குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் விசாரணை நடத்தி வருகிறார்.