விபத்தில் வாலிபர் பலி

Update: 2022-09-05 16:24 GMT

சூளகிரி:

சூளகிரி அருகே காளிங்கவரம் அடுத்துள்ள சின்ன கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் கோவிந்தப்பா (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வேம்பள்ளி ஜங்சன் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கோவிந்தப்பா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்