மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் இறந்தார்.

Update: 2022-09-03 19:47 GMT

சங்ககிரி:

மேட்டூர் அருகே உள்ள விருதாசம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மகன் அரவிந்தன் (வயது 22). இவர் சங்ககிரி அருகே குப்பனூர் பைபாஸ் பகுதியில் உள்ள தாபாவில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 12.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சங்ககிரியில் இருந்து கொங்கணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வரதகாட்டானூர் அருகே சென்ற போது அரவிந்தன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்