ஓமலூரில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

ஓமலூரில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

Update: 2022-08-26 22:38 GMT

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த கோட்டைமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 38). இவர் நேற்று மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, தனது நண்பர் ஸ்ரீதரன் என்பவருடன் மொபட்டில் வந்து உள்ளார். அப்போது ஓமலூர் பஸ்நிலையம் அருகே வந்த போது, எதிரே வந்த மற்றொரு மொபட், அவர்களின் மொபட் மீது மோதியது. சிவகாமி ரோட்டில் தவறி விழுந்தார். அப்போது சங்ககிரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரியின் சக்கரத்தில் சிவகாமி சிக்கினார். இதில் தலை நசுங்கி, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்வடிவேலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்