சீலநாயக்கன்பட்டியில் ஆட்டோ-மொபட் மோதி விபத்து-விவசாயி படுகாயம்

சீலநாயக்கன்பட்டியில் ஆட்டோ-மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-25 22:23 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65), விவசாயி. இவர் ஒரு வேலை விஷயமாக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று திடீரென இவரது மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி தலை, கால், பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்