கொல்லிமலை மாற்றுப்பாதையில் அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து மாணவர்கள், பயணிகள் காயங்கள் இன்றி தப்பினர்

கொல்லிமலை மாற்றுப்பாதையில் அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து மாணவர்கள், பயணிகள் காயங்கள் இன்றி தப்பினர்

Update: 2022-08-22 15:26 GMT

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பைல்நாடு, எடப்புளி நாடு, பெரக்கரை நாடு, சித்தூர் நாடு, திருப்புளி நாடு ஆகிய பகுதிளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மாற்றுப்பாதை அடிவாரத்தில் உள்ள முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை செங்கரை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ்சில் மாணவ, மாணவிகள் முள்ளுக்குறிச்சி அடிவாரம் வழியாக பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மேல் பூசணி குழிப்பட்டி அருகே வந்தபோது பஸ் திடீரென பழுதடைந்து நிலைதடுமாறி தறிகெட்டு ஓடி அங்குள்ள ஒரு தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் அபய குரல் எழுப்பினர். எனினும் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள், பயணிகள் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டிரைவர் குணசேகரனின் சாமர்த்தியத்தால் அங்கு பெரும் விபத்து நடக்க இருந்தது தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக செங்கரை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்