அரசு பஸ் மோதி பெண் பலி

அரசு பஸ் மோதி பெண் பலியானார்.

Update: 2022-08-13 17:38 GMT

தேவகோட்டை,

காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி ரோசாலி (வயது 42). இவர் நேற்று சருகனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஓரியூர் நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரோசாலி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருவேகம்பத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்