மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

மோட்டார்ைசக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானர்.

Update: 2022-08-09 17:26 GMT

திருப்புவனம்,

பூவந்தி அருகே உள்ள கிளாதரி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 48). தொழிலாளியான இவர் திருவாதவூர் செல்வதற்காக கட்டையன்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அதே சமயம் கிளாதரி கிராமத்தை சேர்ந்த நெருநாதன் (35) கட்டையன்பட்டி சாலையிலிருந்து கிளாதரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் பலத்த காயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்த நெருநாதன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதிலிங்கபோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்