அரிசி பாரம் ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது

அரிசி பாரம் ஏற்றி சென்ற லாரி நடு ரோட்டில் கவிழ்ந்தது.

Update: 2022-07-28 17:34 GMT

காரைக்குடி,

குன்றக்குடி போலீஸ் சரகம் பலவான்குடி பகுதியில் நவீன அரிசி ஆலை நடத்தி வருபவர் முகமது சாதிக். இவரது ஆலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் லோடுமேன்களாக வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அரிசி ஆலைக்கு சொந்தமான லாரியில் நெல் மூடைகளை ஏற்றி கொண்டு பிள்ளையார்பட்டிஅருகே உள்ள குடோனுக்கு சென்றது. லாரியில் லோடுமேன்களும் சென்றனர். இந்த லாரியை திருப்பத்தூரை சேர்ந்த மைதீன் (வயது 40) என்பவர் ஓட்டிச்சென்றார். லாரி, குபேரர் கோவில் விலக்கு ரோடு அருகில் செல்லும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று நடு ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் பின்புறம் பயணம் செய்த பீகார் மாநிலம் புர்னியா மாவட்டம் டுகாச்சி கஷ்பா பகுதியை சேர்ந்த நரேஷ்குமார் (22), லட்டு குமார் (22), கோவிந்த் குமார் (23,) சேட்டு குமார் (18), சூரத் குமார் (20), விஷால் (18) ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விஷால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குன்றக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிமொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்