வாழப்பாடி அருகே அரசு பஸ் மோதி காய்கறி வியாபாரி பலி
வாழப்பாடி அருகே அரசு பஸ் மோதி காய்கறி வியாபாரி பலியானார்.
வாழப்பாடி:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையபட்டி கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 46). காய்கறி வியாபாரி. இவர் தினமும் வாழப்பாடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் வந்து காய்கறி வாங்கி சென்று விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வாழப்பாடிக்கு வந்தார். அப்போது வாழப்பாடி அண்ணா நகர் பகுதியில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த சிவராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.