மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தனியார் கல்லூரி லேப் டெக்னீசியன் சாவு ராசிபுரம் அருகே பரிதாபம்
ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தனியார் கல்லூரி லேப் டெக்னீசியன் இறந்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தனியார் கல்லூரி லேப் டெக்னீசியன் இறந்தார்.
லேப் டெக்னீசியன்
ராசிபுரம் டவுன் கண்ணையா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் கணக்காளராக இருந்து வருகிறார். இவருடைய மகன் சுந்தர் (வயது 40). திருமணம் ஆகவில்லை. டிப்ளமோ பட்டதாரியான இவர் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று மாலை கல்லூரியில் இருந்து வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 7 மணியளவில் ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது ராசிபுரத்தில் இருந்து வையப்பமலை நோக்கி சென்ற லாரி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
விசாரணை
இதில் பலத்த காயமடைந்த சுந்தரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுந்தர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுந்தர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.