கார் மோதி வாலிபர் சாவு

கார் மோதி வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2022-06-16 17:59 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே உள்ள ஏ.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் முத்துராஜ் (வயது 23). இவர் மோட்டார்சைக்கிளில் குரண்டி செல்வதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்