டிராக்டர் மோதி கணவன்- மனைவி காயம்

டிராக்டர் மோதி கணவன்- மனைவி காயம் அடைந்தனர்.

Update: 2022-06-14 17:15 GMT

தொண்டி, 

தொண்டி அருகே உள்ள வட்டானம் நந்தியான் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பழம்பதி (வயது58). சம்பவத்தன்று இவரும், இவரது மனைவி பூர்ணவல்லியும் புதுப்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது டிராக்டரை பின்னால் இயக்கியதில் டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழம்பதி, அவரது மனைவி பூர்ணவல்லி ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (47), அவரது 14 வயது மகன் மீதும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்