லாரி உரசியதால் புதருக்குள் பாய்ந்த அரசு பஸ் விபத்து

லாரி உரசியதால் புதருக்குள் பாய்ந்த அரசு பஸ் விபத்துக்குள்ளானது.;

Update: 2023-10-09 19:30 GMT

சூளகிரி:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. இதனை மருதமலை (44) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக சேகர் (50) என்பவர் உடன் வந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சூளகிரி அருகே அந்த வழியாக வந்த லாரி ஒன்று பஸ் மீது உரசியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த புதருக்குள் பாய்ந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பஸ்சில் பயணம் செய்தவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்