அரசு பள்ளி மீது பள்ளி வேன் மோதி 6 பேர் காயம்

Update: 2023-09-29 19:00 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரியில் இருந்து வத்தல்மலைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் நேற்று காலை புறப்பட்டது. இந்த பஸ் நல்லம்பள்ளி அருகே சாமிகவுண்டனூர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதிவிட்டு சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வேன் டிரைவர் மாதேஷ் மற்றும் பள்ளி வாகனத்தில் வந்த தம்மணம்பட்டி கிராமத்தை சேர்ந்த அனுப்பிரியா என்ற சிறுமி உள்பட 6 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து மாணவர்கள் மற்றும் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- வத்தல்மலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் உதவியோடு மீட்புக்குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

Tags:    

மேலும் செய்திகள்