மத்திகிரி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

Update: 2023-09-28 19:00 GMT

மத்திகிரி:

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளியை சேர்ந்தவர் லங்கேஸ்வரன் (வயது 34). ஓசூர் ஜூஜூவாடி பூங்கா நகர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 26-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் மத்தம் அக்ரஹாரம் ஜங்ஷன் அருகே சென்றார். அப்போது எதிரில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் லங்கேஸ்வரன் இறந்தார். அதே நேரத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தபராக் (23) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சய் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்