விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

Update: 2023-08-31 19:00 GMT

சூளகிரி:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கோவிந்த ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 20-ந் தேதி ஓசூருக்கு வேலையாக வந்தார். பின்னர் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சாமல்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் ஒருவர் தவறான பாதையில் வந்து பாலசுப்பிரமணியம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரமணியத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்