ஓசூர்:
ஓசூர், சூளகிரி பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வாலிபர்
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 48). இவருடைய மகன் அஜய் (24). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேனில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்
சூளகிரி அருகே ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பன். விவசாயி. இவருடைய மனைவி ராதா (55). இவர்கள் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராதா சம்பவ இடத்திலேயே இறந்தார். சின்னப்பன் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.