சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-13 18:45 GMT

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் வசந்திமான்ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் சுபாஷினி, கவுன்சிலர்கள் மற்றும் செயலர் முருகன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 15-வது நிதி குழுவின் மூலம் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதித்து எந்தெந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் எந்த பகுதியில் பணிகள் மேற்கொள்வது என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி தலைவர் வசந்தி மான்ராஜ் தலைமையில் துணைத்தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்