உலக காசநோய் தின உறுதிமொழி ஏற்பு
எருமப்பட்டி அருகே அரசு பள்ளியில் உலக காசநோய் தினத்தையொட்டி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.;
எருமப்பட்டி
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நாமக்கல் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் வாசுதேவனின் அறிவுறுத்தலின்படி உலக காச நோய் வார விழாவை முன்னிட்டு காச நோய்க்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர் லலிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செந்தில், மூத்த காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் துணை தலைமை ஆசிரியர் பிரபாகரன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் அனைவரும் காச நோய் தின உறுதிமொழி ஏற்றனர்.