புதிய வருவாய் அலுவலர் பொறுப்பு ஏற்பு

நெல்லை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக சுகன்யா பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

Update: 2023-08-23 19:50 GMT

நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நெல்லை மாவட்ட நதிநீர் இணைப்பு திட்ட நில எடுப்பு வருவாய் அலுவலர் சுகன்யா, நெல்லை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் புதிய மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்