போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
கோத்தகிரி
கோத்தகிரி காவல் துறை சார்பில் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கூக்கல்தொரை கிராமத்தில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் பொதுமக்களிடையே கஞ்சா மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், ஞாபக மறதி குறைபாடு, குற்ற செயல்களில் ஈடுபட தூண்டுவது, பொருளாதார ரீதியான பாதிப்பு, உடல் நலம் கெடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து அதற்கு அடிமையாகாமல் கவனமாக இருக்க வேண்டும் எனக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து அந்த கிராம மக்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.