சென்னை ஐகோர்ட்டில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டில் 5 நிரந்தர நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வெவ்வேறு நாட்களில் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த 5 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்கும் நிகழச்சி சென்னை ஐகோர்ட்டில் இன்று மாலை நடந்தது. அப்போது ஐகோர்ட்டின் தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன், ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை முதலில் வாசித்தார். பின்னர், இந்த 5 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்க ஒப்புதல் அளித்து கவர்னர் பிறப்பித்த உத்தரவை வாசித்தார்.
இதை தொடர்ந்து, ஒவ்வொரு நீதிபதிகளாக பதவி ஏற்க வந்தனர். அவர்களுக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஐகோர்ட்டு நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கல், மூத்த வக்கீல்கல், வக்கீல்கள், பதவி ஏற்றுக் கொண்ட நீதிபதிகளின் உறவினர்கள் என்று ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.