தனியார் பஸ் மோதி ஏ.சி. மெக்கானிக் பலி
தனியார் பஸ் மோதி ஏ.சி. மெக்கானிக் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சு பகுதியை சேர்ந்தவர் பிலால் (வயது 40). ஏ.சி. மெக்கானிக். இவர், நேற்று மாலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அரக்கோணம் செல்வதற்காக அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பெருமூச்சு பகுதியில் உள்ள அரக்கோணம்-காஞ்சீபுரம் சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிலால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.