ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
செய்யாறு அருகே ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு
செய்யாறு அருகே ஏ.சி.மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் கிராமம் விரிவுப்பகுதி வ.உ.சி. முதல் தெருவை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 31). இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்தார். இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் லட்சுமிபதி சரிவர வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.
தினமும் குடித்து விட்டு வந்ததால் மனைவி கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதனிடையே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நித்யா வேலைப் பார்த்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் மனைவி நித்யா வீட்டிற்கு வந்து செல்வார். அதன்படி நேற்று முன்தினம் வந்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் கணவர் லட்சுமிபதி தூக்குப்போட்டுக் கொண்டு பிணமாக தொங்கியதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து செய்யாறு போலீசில் நித்யா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து லட்சுமிபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.