தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-23 18:22 GMT

ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 29). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆற்காடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர் கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சிலம்பரசன் சென்னை பூந்தமல்லி பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் சென்று சிலம்பரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்