தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சேரன்மாதேவி கீழ மூன்றாம் தெருவை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வந்தார்.
பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து கார்த்திக் ராஜாவை சேரன்மாதேவி போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.