கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

வடக்கு விஜயநாராயணம் அருகே கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-18 20:37 GMT

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பெரியநாடார்குடியிருப்பை சேர்ந்தவர் சாமி நாடார் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 40). லாரி டிரைவர். இவர் 2014-ஆம் ஆண்டு தனது அண்ணன் மனைவியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் அவர் கடந்த ஓராண்டாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பெரியநாடார்குடியிருப்புக்கு வந்த முத்துகிருஷ்ணனை கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு உத்தரவுப்படி, வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்