தலைமறைவு குற்றவாளிகள் 459 பிடிபட்டனர் 30 பேர் குடும்ப நல கோர்ட்டில் ஆஜராக போலீசார் நடவடிக்கை
தலைமறைவு குற்றவாளிகள் 459 பிடிபட்டனர் 30 பேர் குடும்ப நல கோர்ட்டில் ஆஜராக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனா்.;
கடலூர் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணை வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்கும் குற்றவாளிகளை பிடித்து, கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 6 மாதங்களில் கோர்ட்டுகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 459 பேரை போலீசார் பிடித்து கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தினர்.
மேலும் குடும்ப நல கோர்ட்டில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜீவனாம்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்குகளில், குடும்பநல கோர்ட்டு மூலம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று பிறப்பித்த தீர்ப்புகளில் ஆஜராகாமல் இருந்த 30 பேரை போலீசார் பிடித்து ஆஜராக வைத்தனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து ஜீவனாம்சம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.