வீடுதோறும் தேசியகொடி ஏற்றுவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டத்தில் வீடுதோறும் தேசியகொடி ஏற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

Update: 2022-07-21 16:06 GMT

நாடு முழுவதும் 75-வது சுதந்திர திருநாள் அமுதபெருவிழாவையொட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் வீடுதோறும் தேசியகொடி ஏற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது, மக்களிடம் இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

நகராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், வீடுதோறும் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்