கன்றுகளுக்கு கருசிதைவு நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது

வேலூர் மாவட்டத்தில் கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது.

Update: 2023-01-31 13:42 GMT

வேலூர் மாவட்டத்தில் கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடங்குகிறது.

தடுப்பூசி முகாம்

தேசிய விலங்கியல் நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் கிடேரி கன்றுகளுக்கு கருசிதைவு நோய் தடுப்பூசி வேலூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு முதல் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 4 மாதம் முதல் 8 மாதத்துக்கு உட்பட்ட கிடேரி கன்றுகள் மற்றும் எருமை கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான முகாம் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது.

முதல்கட்டமாக வேலூரை அடுத்த வல்லண்டராமம் கிராமத்தில் தடுப்பூசி முகாம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக பல்வேறு கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி போடப்படுகிற கிடேரி கன்றுகளுக்கு 12 இலக்க எண் கொண்ட காதுவில்லைகள் பொறுத்தப்பட்டு, உரிமையாளர் பெயர், விலாசம், தடுப்பூசி போடப்பட்ட விவரம், கால்நடைகளின் இனம் ஆகிய விவரங்கள் உடனடியாக பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், கால்நடை நிலையங்களிலும் உள்ள பதிவேட்டிலும் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

மலட்டுதன்மை தவிர்க்கப்படும்

அதனால் கால்நடை வளர்ப்போர்கள் அரசால் அறிவிக்கப்படுகின்ற கால்நடை சம்மந்தப்பட்ட திட்ட பயன்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கிடேரி கன்றுகள் மற்றும் எருமை கன்றுகளுக்கு கருசிதைவு தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன் காதுவில்லைகளை தடுப்பூசி போடப்பட்ட கன்றுகளுக்கு பொறுத்தி கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதால் மாடுகளுக்கு ஏற்படும் கருச்சிதைவும், மலட்டுத்தன்மை தவிர்க்கப்படுகிறது. இந்த தகவலை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்