கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
நெல்லையில் கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை நகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தலைவர் (பொறுப்பு) சின்னத்துரை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிஇருப்பதாவது:-
சங்க செயலாளராக பணிபுரிந்து வரும் அருணாசலம், சட்ட விதிகளுக்கு புறம்பாக சமூகரெங்கபுரம் பள்ளி ஆசிரியை மற்றும் டவுன் கல்லணை பள்ளி ஆசிரியை ஆகியோருக்கு போலி கடன் வழங்கி உள்ளார். அந்த கடனை முறையாக வசூல் செய்யவில்லை. எனவே சங்க செயலாளர் அருணாசலத்தை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.