கிருஷ்ணகிரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், துணை தாசில்தார் சிதம்பரம், கலெக்டர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.