நேரடி நியமனம் ரத்து... சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-20 12:59 GMT

சென்னை,

மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மத்திய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கடிதம் எழுதி உள்ளார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமனத்தை கைவிட்டது சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றி. இந்தியா கூட்டணியின் எதிர்ப்புக்கு பின் நேரடி நியமன ஆள்சேர்க்கையை மத்திய அரசு கைவிட்டுள்ளது

மத்திய பா.ஜனதா அரசு பல்வேறு வடிவங்களில் இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சிப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டின் தன்னிச்சையான 50 சதவீத உச்சவரம்பு உடைக்கப்பட வேண்டும், மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Tags:    

மேலும் செய்திகள்