பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் 250 லிட்டர் நெய் கொண்டு அபிஷேகம்
மயூரநாதர் ஆலயத்தில் 250 லிட்டர் நெய் கொண்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் ஆலயத்தில் 250 லிட்டர் நெய் கொண்டு சுவாமிக்கும், அம்பாளும் அபிஷேகம் செய்யப்பட்டது.
1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் பொங்கல் திருநாளன்று மயூரநாதர் சுவாமி மற்றும் அருள்மிகு அபயாம்பிகை அம்பாளுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 250 லிட்டர் நெய் கொண்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.