ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தில் அபீதகுஜாம்பாள் அம்மன்

சி அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூபாய் நோட்டுக்கள் அலங்காரத்தில் அபீதகுஜாம்பாள் அம்மன் அருள்பாலித்தாா்.

Update: 2023-10-25 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி பீரங்கி மேடு பகுதியில் உள்ள அபீத குஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலில் விஜயதசமி விழா நடைபெற்றது. இதையொட்டி, சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், அபீதகுஜாம்பாள் சாமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் அருள்பாலித்த அபிதகுஜாபாள் சாமியை, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்