போலீஸ் போல் நடித்து விவசாயியிடம் ரூ.51 ஆயிரம் அபேஸ்
திண்டிவனம் அருகே போலீஸ் போல் நடித்து விவசாயியிடம் ரூ.51 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது.;
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 65). விவசாயியான இவர், வெள்ளிமேடுபேட்டை இந்தியன் வங்கியில் ரூ.51 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 45 வயதுடைய நபர் ஒருவர் போலீஸ் என்றும், பையில் கஞ்சா வைத்திருக்கிறாயா? என்று கூறியபடி ராதாகிருஷ்ணனின் பையை சோதனை செய்தார். பின்னர் அந்த நபர், பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார். இது குறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.