ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ்

நித்திரவிளை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமி அபேஸ் செய்தார்.

Update: 2023-09-09 18:45 GMT

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சத்தை மர்ம ஆசாமி அபேஸ் செய்தார்.

நித்திரவிளை அருகே உள்ள மணக்காலையை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 45 வயதுடைய மனைவி உண்டு. இவர்களது மகளின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமண தேவைக்கு பணம் எடுப்பதற்காக தாயும், மகளும் நடைக்காவு பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று தங்களது கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் பணம் எடுத்தனர். பின்னர் அரசு பஸ் மூலம் களியக்காவிளைக்கு சென்று விட்டு மீண்டும் அரசு பஸ்சில் ஏறி வீட்டிற்கு வந்தனர். வீட்டில் வந்து தாய் வைத்திருந்த தோள்பையை திறந்து பார்த்தபோது அது கிழிக்கப்பட்டு இருந்தது. மேலும், பையில் இருந்த ரூ.1½ லட்சத்தில் ரூ.1 லட்சத்தை காணவில்லை. பஸ்சில் பயணம் செய்த யாரோ மர்ம நபர்கள் பையை பிளேடால் கிழித்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்