சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 51) என்பவர் சாமி கும்பிட வந்தார். பின்னர் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த போது அவர் அணிந்திருந்த 3 பவுன் நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரிடம் இருந்து நகையை அபேஸ் செய்திருக்கலாம் என்பது கூறப்படுகிறது. இதுகுறித்து சரஸ்வதி சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.