அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

நெமிலி அருகே அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது.;

Update:2023-10-16 00:19 IST

நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பம் கிராமத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நெமிலி மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் கலந்துகொண்டு அப்துல்கலாம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சயனபுரம் கண்டிகை கிராமத்திலும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் சுரேஷ், ராஜேஷ், சுற்றுச்சூழல் அணி ராஜராஜன், தி.மு.க. நிர்வாகிகள் எல்லப்பன், சலீம், ஷேக் முகமது, மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்