அப்துல்கலாம் பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நடந்த சிறப்பு துஆ பிரார்த்தனையில் இஸ்ரோ தலைவர், கலெக்டர் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;
ராமேசுவரம், .
பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 92-வது பிறந்தநாள் விழா ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு துறை தலைமை அதிகாரி அனில்இரோமா, அதிகாரி வினோத்குமார், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசீமா மரைக்காயர், பேரன் சேக்சலீம், மருமகன் நிஜாமுதீன் மற்றும் டாக்டர் ஜெயசுதா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக கலாம் நினைவிடத்தில் ஆலிம்சா ஜாபர் சாதிக் தலைமையில் சிறப்பு துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அதிகாரி கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் சிவானந்தம், வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை சூப்பிரண்டு உமாதேவி, ராமேசுவரம் நகர சபை சேர்மன் நாசர் கான், மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் ராஜா, தாசில்தார் அப்துல்ஜபார், மக்கள் ெதாடர்பு அதிகாரி பாண்டியன், மாநில இளைஞரணி நிர்வாகி இன்பாரகு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜீவானந்தம், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் தவ்பீக் அலி, தி.மு.க. மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் நாகராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார், மணி மண்டப கட்டிட பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.