அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

மேலஆழ்வார்தோப்பில் கிராம உதயம் சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-10-16 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் மரம் நடும் விழா பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் பகுதி அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் கருங்குளம் யூனியன் தலைவர் கோமதி ராஜேந்திரன் மரக்கன்று மற்றும் பனவிதைகளை விதைத்தார்.

நிகழ்ச்சியில் மக்கள் நலப்பணியாளர் அருணாசலம், பள்ளிவாசல் செயலாளர் கனி, வார்டு உறுப்பினர் இப்ராகிம், மக்கள் நல இயக்ககத்தை சேர்ந்த செய்யது உள்பட பலர் கலந்துகொண்டனர். பஞ்சாயத்து எழுத்தாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்