அப்துல்கலாம் பிறந்த நாள் விழா

ஊத்துமலை அருகே அப்துல்கலாம் பிறந்த நாள் விழா நடந்தது.்

Update: 2023-10-17 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

ஊத்துமலை அருகே கங்கணங்கிணறு கிராமத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள்விழாவை முன்னிட்டு சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. தமிழக வணிகர் சம்மேளனம் மற்றும் அரிசன் நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய இந்த போட்டிக்கு பள்ளி நிர்வாகி மரிய அருள்மணி, தலைமை ஆசிரியர் மணி அரசு ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக வணிகர் சம்மேளனம் மாநில தலைவர் தமிழ்ச்செல்வம், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், மாநில பொருளாளர் மைதீன் ஒலி, ராமசந்திரன், சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் பா.ஜ.க. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவர் அ.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் அன்புராஜ், வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர் வக்கீல் ராம்குமார், சிவா பால்பாண்டியன், விண்ணரசி, தேவபாலன், கயல் மணிகண்டன், சங்கர் நாராயண், மாரிச்செல்வம், கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழக வணிகர் சம்மேளன மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்