ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகைகள் அபேஸ்

சேத்தியாத்தோப்பு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் நகைகளை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2023-05-07 18:43 GMT

சேத்தியாத்தோப்பு, 

புவனகிரியை சேர்ந்தவர் மாலிக் ஜான் மனைவி தில்ஷாத் பேகம் (வயது 48). இவர் வடலூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக ஒரு கைப்பையில் 7 பவுன் நகைகளை எடு்த்து வைத்துக் கொண்டு புவனகிரி பங்களா பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர், அவ்வழியாக சேலம் நோக்கி வந்த அரசு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார். சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே சென்றபோது, கைப்பையை பார்த்தபோது, அதில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகைகளை காணவில்லை. அதனை பஸ்சில் வந்த மர்மநபர் யாரோ? அபேஸ் செய்துவிட்டு, இடையில் இறங்கி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகைகளை அபேஸ் செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்