ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி அபேஸ்

சேரன்மாதேவியில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் அபேஸ் செய்தனர்.

Update: 2023-07-13 20:43 GMT

சேரன்மாதேவி:

நெல்லை தாழையூத்து தெற்குச் செழியநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மனைவி சொர்ணம் (வயது 76). இவர் சம்பவத்தன்று கல்லிடைக்குறிச்சியில் இருந்து அரசு பஸ்சில் ஏறி சேரன்மாதேவி பஸ் நிலையம் வந்தார். பஸ்நிலையத்தில் இறங்கி பார்த்தபோது தனது கழுத்தில் இருந்த சுமார் 10 பவுன் தங்க சங்கிலி காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவரது சங்கிலியை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்