தேசிய அபாகஸ் போட்டியில் குமாரபாளையம் மாணவர் சாதனை

தேசிய அபாகஸ் போட்டியில் குமாரபாளையம் மாணவர் சாதனை

Update: 2022-11-02 18:49 GMT

குமாரபாளையம்:

சென்னையில் பிரைனோ பிரைன் அமைப்பு சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் குமாரபாளையத்தை சேர்ந்த மாணவர் ஹரிஹரன் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இவர் மாநில அளவிலான போட்டியில் 2 முறையும், தேசிய அளவிலான போட்டியில் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 3-வது முறையாக தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவரை ப்ரைனோ பிரைன் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் சுப்ரமணியம், மேலாளர் அருள் சுப்ரமணியம் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் சாதனை மாணவரை கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், ஈஸ்வரன் உள்பட பலர் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்