வாடகை வாகன டிரைவர்கள் வேலை நிறுத்தம்: திருச்சியில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

வாடகை வாகன டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் திருச்சியில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-05-29 07:12 IST

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் வாடகை பாக்கியால் ஆவின் பால் எடுத்து செல்லும் வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 மாதங்களாக வாடகை கொடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி ஆவின் பால் கொண்டுசெல்லும் வாகனங்களின் டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்