ஆடிப்பூர தெப்ப திருவிழா கொடியேற்றம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

Update: 2022-07-23 20:14 GMT

ஸ்ரீரங்கம், ஜூலை.24-

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா நேற்று மாலை 5.30 மணிக்கு துனுர் லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.

விழாவின் 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்மன் கிளிவாகனத்திலும், 3-ம் நாள் காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் சந்திரபிரபை வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷபவாகனத்திலும், 6-ம்நாள்பஞ்சமூர்த்தி புறப்பாடும், ரிஷபமூஷிகமயூர வாகனத்திலும், 7-ம் நாள் பல்லக்கிலும், 8-ம் நாள் சிம்மவாகனத்திலும் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதிஉலா வருகின்றார். விழாவின் 9-ம் நாளான 31-ந் தேதி காலை கோரதத்திலும், மாலை வெள்ளிமஞ்சத்திலும், 10-ம் நாள் பல்லக்கிலும் வீதியுலா வருகிறார். தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் வெள்ளிமஞ்சத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12-ம் நாளான 3-ந் தேதி மாலை 4.45மணிக்கு மேல் மாலை 5.30 மணிக்குள் கோவில் வளாகத்தில் உள்ள உள்தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்