ஆடிப்பூர வளைகாப்பு விழா

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது.;

Update:2022-08-01 21:25 IST

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம் உள்ளது. இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பாலநாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி மாலை 5 மணிக்கு ஆடிப்பூர வளைகாப்பு பற்றி குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து முப்பெரும் தேவியருக்கு பால், பச்சைஅரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர் உள்பட 21 வகையான திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம், பெரிய தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோவில் குருநாதர் சக்தியம்மா முப்பெரும் தேவியர் அம்மாக்களுக்கு வளைகாப்பு அணியும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு 21 வகையான சிறப்பு வளைகாப்பு சாதம் படைத்தலும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்